Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 30 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குபட்பட்ட பலாச்சோலைக் எனும் கிராமத்தில் மூன்று பிள்ளைகளுடன் ஓலைக் குடிசையில் வசித்து வந்த சுந்தரலிங்கம் தரிசினி எனும் குடும்பத்திற்கு லண்டனில் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டுவரும் ஸ்ரீ லங்கன் பெமிலி செரண்டிப் பவுண்டேன் எனும் அமைப்பினால் 1,265,000 ரூபாய் பெறுமதியான கல்வீடு ஒன்று அமைக்கப்பட்டு, அதனை உரிய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதன்போது ஸ்ரீ லங்கன் பெமிலி செரண்டிப் பவுண்டேன் அமைப்பின் தலைவர் குணரெட்ணம் ரகுலோட்சனன் மற்றும் அப்பகுதி மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
“ஓலைக் குடிசையில் இருந்து கொண்டு தினமும் நாட்கூலி வேலை செய்து தமது குடும்பத்தைப் பார்த்து வந்த எமக்கு இவ்வாறு ஓர் நிரந்தர கல்வீடு கிடைக்கப்பெற்றமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. எமக்காக தாமாகவே முன்வந்து வீட்டை அமைத்து தந்த ஸ்ரீ லங்கன் பெமிலி செரண்டிப் பவுண்டேன் அமைப்பினருக்கு தமது ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என சுந்தரலிங்கம் தரிசினி இதன்போது தெரிவித்தனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
53 minute ago