Janu / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குபட்ட உன்னிச்சை குளத்துக்கு அருகில் வைத்து 70 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பபுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்தாக ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.இக்பால் தெரிவித்தார்.
ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதலின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படுத்திய இரண்டு வெற்று பரல்களும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .