Freelancer / 2021 ஜூலை 11 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள இரண்டு வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், கேரள கஞ்சா, ஐஸ் போதைப் பொருள் என்பவற்றுடன் வியாபாரிகள் இருவர் உட்பட ஐவரைக் கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது. ஒரு கிலோ கிராம் 850 கிராம் கஞ்சா மற்றும் 202 கிராம் ஐஸ்போதைப் பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து. நேற்று (10) இரவு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸாரால் இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வாழைச்சேனை, செம்மண்ஓடை பகுதியிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்டு சோதனையிட்டபோது, வியாபாரத்துக்காக மன்னாரிலிருந்து கொண்டுவரப்பட்ட 1 கிலோ கிராம் 850 கிராம் கேரள கஞ்சாவை மீட்ட பொலிஸார், கஞ்சா வியாபாரியையும் கைது செய்தனர்.
அதேவேளை வாழைச்சேனை பகுதியிலுள்ள இன்னொரு வீட்டை முற்றுகையிட்ட பொலஸார், 202 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் 21 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026