Suganthini Ratnam / 2016 ஜூன் 15 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சந்தேக நபர் ஏறாவூர், மீராகேணிப் பகுதியில் வீதிகளில் உலாவிக்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, இன்று புதன்கிழமை காலை குறித்த இடத்துக்குச் சென்று சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவரிடம் 5,600 மில்லிக்கிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் இந்நிலையில், சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும்; பொலிஸார் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க, கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய ஒருவரை மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (14) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து ஐந்து கிலோ 900 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சந்தேக நபர் கஞ்சாவுடன் பஸ் வண்டியில் பயணிப்பதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, வாழைச்சேனை பஸ் தரிப்பு நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் தாம் ஈடுபட்டதாகவும் இவ்வேளையில் பஸ் வண்டியிலிருந்து இறங்கிச் செல்ல முற்பட்ட சந்தேக நபரை சுற்றிவளைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் வைத்திருந்த பையில்; கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சந்தேக நபரின் தாய் ஏற்கெனவே ஐந்து கிலோ கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நிலையில் சிறைச்சாலையில் கடந்து எட்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்ததுடன், தந்தை கஞ்சா தொடர்பான நான்கு குற்றச்செயல்களில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளிவந்துள்ளார் எனவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago