2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கடத்திச் செல்லப்பட்ட மாடுகளும் மரக்குற்றிகளும் கைப்பற்று

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 4 மாடுகளும் ஒருதொகை மரக்குற்றிகளையும், இன்று (31) அதிகாலை தாம் கைப்பற்றியதாக, வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.                      

தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வவுணதீவில் இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கையின்போது,  இந்தக்  கைப்பற்றல் இடம்பெற்றதாக வவுணதீவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி. நிஸாந்த அப்புஹாமி தெரிவித்தார். 

பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஆரியசேன, பொலிஸ் உத்தியோகத்தர்களான பி. புனிதகுமார், வை.வி. கஷீர், ஆர். நந்தராஜபக்ஸ, எஸ். மனோகரன், எம்.சாஜஹான் ஆகியோரிணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

படுவான்கரை பிரதேசத்திலிருந்து  காத்தான்குடி, மட்டக்களப்பு போன்ற நகரப் பகுதிகளுக்கு  அதிகமாக  மாடுகள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தக் கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுணதீவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X