Suganthini Ratnam / 2016 ஜூன் 03 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையோரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள கழிவுப்பொருட்களை அகற்றி அவற்றினை அழகுபடுத்தும் பணிகள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு கடல் பகுதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள், மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட மாநகரசபை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது நாவலடி தொடக்கம் கல்லடி வரையான கடற்கரை பகுதிகளில் உள்ள சுற்றாடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் உக்காத கழிவுப்பொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago