Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2022 ஜூலை 04, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 23 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். எஸ்.எம். நூர்தீன்
காத்தான்குடியில் உணவு பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்று காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏற்பாட்டில், சம்மேளன மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (21) இரவு நடைபெற்றது.
பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ். எச். அஸ்பர், சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.எச். ரமீஸ் ஜமாலி, காத்தான்குடி உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ. எஸ். எம். ஹாரூன், செயலாளர் அஷ்ஷெய்ஹ் அன்சார் தழீமி உட்பட பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், விவசாய மற்றும் கால்நடை திணைக்களங்களின் உயரதிகாரிகள், உலமாக்கள் சமூக நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள், அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள், பலசரக்கு மொத்த வியாபாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உணவு பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஒன்று ஏற்படுமாயின் அதை எவ்வாறு சமாளிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
வீட்டு தோட்ட பயிர்ச்செய்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், வீட்டு தோட்ட பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதெனவும், எதிர்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
54 minute ago
1 hours ago