Freelancer / 2022 மே 27 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபை உறுப்பினரும், இலங்கை உதைப்பாந்தாட்ட சங்கத்தின் பிரதிப்பொது செயலாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப் தனது இராஜினாமாவை நேற்று மாநகர அமர்வில் அறிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபை நிர்வாக சீர்கேடுகள், கல்முனை முதல்வரின் ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பேசி, 50 மாதங்களாக உறுப்பினராக இருந்து மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் உட்பட பலருக்கும் நன்றி தெரிவித்து தனது இராஜினாமாவை அறிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எனக்கு இந்த மாநகர சபை உறுப்பினர் பதவியை ஒப்படைத்த போது எந்த நிமிடமும் தலைவர் கூறினால் இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தேன்.
அதனடிப்படையில் 50 மாதங்கள் இந்த சபையில் உறுப்பினராக இருந்திருக்கிறேன்.
இந்த சபையை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கட்சி பேதங்களை மறந்து மக்களின் நலனுக்கு குரல் கொடுத்திருந்தால் நிறைய மக்கள் சேவைகளை முதல்வர் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அதிகார துஸ்பிரயோகம், நியாயத்தின்பாலானவர், ஊழல்கள் இல்லாத ஒருவரையே கல்முனை மாநகர மக்கள் முதல்வராக இருத்த விரும்புகிறார்கள். இதனை மனதில் கொண்டே நிறைய ஊழல் நடவடிக்கைகள், அதிகார துஸ்பிரயோகங்ககளை என்னுடைய பதவிக்காலத்தில் தட்டிகேட்டிருக்கிறேன்.
அதற்கான வாய்ப்பை உருவாக்கித்தந்த எனது தலைவர் றிசாத் பதியுதீன், உட்பட அநீதிகளுக்கு எதிரான குரலுக்கு பக்கபலமாக இருந்த மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை பிரிவின் தலைவர்கள், ஊழியர்கள் என எல்லோருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். (R)
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago