Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மட்டக்களப்பில் முன்னெடுக்கவுள்ள போராட்டத்துக்கு, அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மட்டக்களப்பு வொயிஸ் உப் மீடியா நிறுவன அலுவலகத்தில் நேற்று (06) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் சார்பில் திருமதி அ.அமல நாயகி கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்ததாவது,
“மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) காலை 9 மணிக்கு போராட்டமொன்றை நடத்தவுள்ளோம்.
“இதன்போது, ஒரு மாபெரும் பேரணியும் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் அருகே ஆரம்பமாகும் இப்பேரணி, மட்டக்களப்பு காந்திப்பூங்காவைச் சென்றடையும். அத்துடன், எமது கோரிக்கைகளை உரிய தரப்பினருக்குக் கையளிக்கவுள்ளோம்.
“பேரணியின் இறுதியில் அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியைச் சொல்லவுள்ளோம்.
“இதுவரை காலமும் எமது உரிமைக்காக எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தனித்துப் போராடிய நாம் அதன்மூலம் எதிர்பார்த்த தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் எமது உரிமைகளுக்காக இப்போராட்டத்தை பலப்படுத்தும் நோக்குடன், இந்தப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
“இந்தப் பேரணியில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிழக்க மாகாணத்திலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற் சங்கங்கள், பட்டதாரிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் எனப் பலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago