Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 01 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி காதி நீதிமன்ற நடவடிக்கைகள், இம்மாதம் 06ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்புமென, காத்தான்குடி காதி நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.உமர்லெவ்வை தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, காத்தான்குடி காதி நீதிமன்றம் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சமூக நிவாரண நடவடிக்கைகளுக்காக காதி நீதிமன்றத்தில் பிள்ளை தாபரிப்புப் பணம் பெறுகின்றவர்களுக்கான கடிதங்கள் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன.
சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள முகக் கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணல் போன்ற அறிவுறுத்தல்களை கவனத்திற்கொண்டு, காதி நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago