2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் சிக்கிய கஞ்சா வியாபாரி

Freelancer   / 2023 ஜூலை 23 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை சனிக்கிழமை (22) முற்றுகையிட்ட பொலிஸார்   1,659 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தெரிவித்தார்.

சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன் போது வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்டு பதுக்கிவைத்திருந்த கஞ்சாவை மீட்டதுடன் 55 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .