2025 மே 19, திங்கட்கிழமை

காத்தான்குடியில் தேர்தல் காரியாலயம் தீக்கிரை

Editorial   / 2018 ஜனவரி 27 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்காகப் போட்டியிடும் ஊடகவியலாளர் ரீ.எல். ஜவ்பர்கானின் தேர்தல் காரியாலயம், இன்று (27) அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி மீராபள்ளி வட்டாரத்தில் அமைந்திருந்த குறித்த அபேட்சகரின் அலுவலகம், இனந்தெரியாதோரால் முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X