Editorial / 2018 ஜூன் 10 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.விஜயரெத்தினம்
புதிய காத்தான்குடியில், கடந்த வௌ்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி பொலிஸாரால், மூன்று பேர் நேற்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதிய காத்தான்குடி 5 - கர்பலா வீதி, அலியார் சந்தியிலுள்ள தேநீர்க் கடைக்குள், அன்றிரவு 11:45 மணியளவில் புகுந்த இனந்தெரியாத நபர்கள், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர்.
சம்பவத்தில், கடையின் உரிமையாளரான பழனிபாவா என்றழைக்கப்படும் ஆதம்பாவா முஹம்மத் இஸ்மாயில் (வயது 73) உயிரிழந்தார்.
ஸ்தலத்துக்கு விரைந்த தடயவியல் பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்தனர். இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்ற சந்தேகநபர்கள், கொக்கட்டிச்சோலைப் பகுதியில் தலைமறைவாகியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அதனைடுத்து அங்கு சென்ற தாம், சந்தேகநபர்கள் மூவரையும் கைதுசெய்ததாகத் தெரிவித்த காத்தான்குடிப் பொலிஸார், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் செல்வதற்காகப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago