Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடியில் கொரோனா வைரஸ் தொற்றும் மரணமும் ஏற்பட்டிருப்பதை அடுத்து, ஏறாவூரில் வர்த்தகம் செய்யும் காத்தான்குடி வியாபாரிகள் மீது தீவிர கவனம் திரும்பியுள்ளது.
ஏறாவூரில் நிரந்தர கடைகளைக் கொண்டிருக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள், கொரோனா வைரஸ் பரவல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை தமது சொந்த ஊரான காத்தான்குடிக்குப் பயணம் செய்வதை தவிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக, ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத் தலைவர் இஷற் ஏ. இனாயத்துல்லாஹ் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக, ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கம், ஏறாவூர் பொலிஸ், ஏறாவூர் நகர சபை, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம் ஆகியவை இணைந்த கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து அவர் விவரம் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற ஏறாவூர் கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி நகர சபையின் தவிசாளரால் காத்தான்குடி வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலுக்கமைவாக, ஏறாவூர் வர்த்தகர் சங்கமும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவு அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், ஏறாவூருக்குள் வெளிப் பிரதேசத்தில் இருந்து வியாபார நோக்கங்களுக்காகவும், அத்தியவசிய தேவையில்லாத ஏனைய விடயங்களுக்காகவும் வருவதை வெளியூர் வர்த்தகர்கள் உட்பட அனைவரும் தற்காலிகமாக தவிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
இந்தத் தீர்மானங்களை மீறும் நபர்கள், வர்த்தகர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago
1 hours ago