Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 17 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 28 வயதுடைய நபரை 2,050 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மாவட்டத்திலுள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள காரியாலயத்தில் பணியாற்றிவருவதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை எனவும், அவருக்கான சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு செல்வதாக தெரிவித்துக்கொண்டு போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வேலைக்குச் சென்று சம்பளம் வந்தது போல போதைப் பொருள் வியாபாரத்தின் ஊடாக கிடைத்த பணத்தை மனைவியிடம் வழங்கி வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R
39 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago
4 hours ago