எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 29 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் இவ்வாண்டு டெங்குக் காய்ச்சலால் 26 பேர் உயிரிழந்துள்ளனரென, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டொக்டர் எம்.முருகானந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பான அரவ் மேலும் தெரிவித்ததாவது,
“திருகோணமலை மாவட்டத்தில் 17 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பேரும், கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் 3 பேரும், டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
“அதேபோன்று, இவ்வாண்டு டெங்குக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“தற்போது கிழக்கு மாகாணத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால், டெங்கு நுளம்பின் பெருக்கமும் அதிகரிக்கும். இதில் பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
“டெங்கு நும்பு பெருகக் கூடிய வகையில் வீடுகள், பாடசாலைகள், பொது இடங்களை வைக்க கூடாது. நாம் வசிக்கும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
“பிரதேசங்கள் தோறும் சுகாதார வைத்திய அலுவலகங்களால், பல்வேறு வகையான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள் ஆகியன படையினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன், இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, விழிப்புணர்வு நடவடிக்கையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
இதில் பொது மக்கள் கூடுதல் அக்கறை எடுப்பதுடன் டெங்கு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
15 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
35 minute ago