Editorial / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், எஸ்.எம்.அறூஸ்
திருகோணமலை நகரத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டமொன்று, "சூரியன் உதயமாகும் கிழக்கை அழகுபடுத்துவோம்" எனும் தொனிப்பொருளில், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில், இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் முதல் அங்கமாக, திருகோணமலை நகரக் கடற்கரை, நேற்யைதினம் சுத்தப்படுத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களைச் சேர்த்த உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், முப்படை அதிகாரிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு, கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடனர்
இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர், இவ்வாறான செயற்றிட்டத்தின் மூலம் இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் உருவாக்க முடியுமென்றார்.
அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் இவ்வாறே திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் வெள்ளத்தால் அவற்றை முன்னெடுக்க முடியாதுள்ளதெனவும் தெரிவித்தார்.
வௌ்ள நீரை வெளியேற்றிய பின்னர் நகரைச் சுத்தப்படுத்தும் வேலைஈ அம்மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .