Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, வ.திவாகரன், எம்.எஸ்.எம்.நூர்தீன், க.சரவணன்
மட்டக்களப்பு - முனைக்காடு, தெற்கு வீட்டுத்திட்டப் பகுதியில், 5 பிள்ளைகளின் தந்தையான இரட்ணசிங்கம் உதயன் (35 வயது) எனும் குடும்பஸ்தர், நேற்று (23) இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை, இன்று (24) காலை பார்வையிட்ட நீதிபதி எம்.றிஸ்வான், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லுமாறு பணித்தார்.
அத்தோடு, சம்பவ இடத்துக்கு வருகைவந்த மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸாரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லையெனத் தெரிவித்த கொக்கட்டிச்சோலை பொலிஸார், சம்பவம் தொடர்பிலான தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
13 minute ago
17 minute ago