ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில், ஒரு கிலோ 250 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபரொருவரை, விசேட அதிரடிப்படையினர் நேற்று (02) மாலை கைது செய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, கஞ்சா விற்பனை செய்து வந்த மேற்படி நபரிடம், விசேட அதிரடிப்படையினர், கஞ்சா கொள்வனவு செய்வது போன்று வேடம் பூண்டு, காத்தான்குடி பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த கஞ்சா வியாபாரி கஞ்சாவுடன் வந்திருந்தபோது, விசேட அதிரடிப்படையினர் அவரைச சுற்றிவளைத்து கைதுசெய்ததுடன், அவரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் பொலன்னறுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
53 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
7 hours ago