Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
ஆர்.ஜெயஸ்ரீராம் / 2017 ஜூலை 28 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரத்திலுள்ள கைவிடப்பட்ட காணியிலிருந்து, குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலத்தை, இன்று (28) மீட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கல்மடு மருத நகர் விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசையா ரவிச்சந்திரன் வயது (38) என்பவரது சடலமே, மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (27) நண்பகல் வேளை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தொலைபேசியில் இறுதியாகத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதன் பின்னர் அவரது தொலைபேசி இயங்கவில்லை என, மரணமடைந்தவரின் மனைவி, தமது மரணவிசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார் என, மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ்ஆனந்த தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
8 hours ago
9 hours ago
24 May 2025