2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கொரோனா வைரஸ் அச்சம்: பாடசாலைகள் வெறிச்சோடின

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மட்டக்களப்பிலுள்ள தனியார்ப் பல்கலைக்கழகத்தில், கொரோனா வைரஸ் தாக்கமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கவைக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ​பரவியதால், இன்றையதினம் மட்டு. நகர் பாடசாலைகளில், மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டதாகத் தெரியவருகிறது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம், புணானை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றிலேயே, மாணவர் வருகை வீழ்ச்சியடைந்து, குறித்த பாடசாலைகள், வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளன.

இருப்பினும், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் வருகையில் மாற்றமிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X