பேரின்பராஜா சபேஷ் / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்துக்குட்பட்ட தேவபுரம் கோரளங்கோணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோழிப் பண்ணையை உடனடியாக அகற்றுமாறு கோரி, பிரதேச மக்கள், இன்று (19) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பில், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு, தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கோரளங்கேணி பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக இறைச்சிக் கோழி பண்ணை அமைக்கப்பட்டு கோழி வளர்ப்பு நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் சுகாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
பண்ணையிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை எவ்வித ஆரோக்கியமான தீர்வையும் பெறமுடியவில்லையென போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த கோழிப் பண்ணை கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள போதிலும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையிடம் பண்ணைக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago