2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கைகலப்பு; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 14 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த மூன்று பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்;களுக்கு இடையிலேயே காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாசல் வீதிச் சந்தியில் திங்கட்கிழமை (13) இரவு இந்தக் கைகலப்பு இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் இருவருக்கும் இடையில் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா பள்ளிவாசல் ஜமா அத்தார் சங்கம் தொடர்பாக  ஏற்பட்ட வாய்த்தர்;க்கம் கைகலப்பாக மாறியதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் கைகலப்புச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X