2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கையெழுத்துப் போராட்டம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 25 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்

உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் 25 சதவீத பங்களிப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று (25) கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி, மாகாணசபைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஆதரவுடன் இலங்கைக்கான ஜேர்மன் தூதரகத்தின் அனுசரணையுடன் பொதுமக்களிடம் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.

உள்ளூராட்சி அரசியலில் பெண்களின் பங்கை வலுப்படுத்த வேண்டும். 25 சதவீத ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X