Princiya Dixci / 2016 ஜூன் 08 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
சிவில் அதிகாரிகள் தங்களது கடமையினை மேற்கொள்ளும்போது சீருடை தரித்தவர்கள் அதனை குழப்பும் வகையில் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனத் தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம், கிரானில் கிராம சேவையாளர் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், நேற்று செவ்வாய்க்கிழமை (07) காலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஞானசிறி,
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு என்னும் பகுதியில், சட்ட விரோத மரக்கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையினை குறித்த பிரதேச கிராமசேவையாளர் செய்தபோது இராணுவத்தினர் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இது மிகவும் கண்டனத்துக்குரிய விடயமாகும். இது தொடர்பில் மூன்று இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டபோதிலும் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இந்தச் சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
சிவில் அதிகாரிகள் தங்களது கடமையினை மேற்கொள்ளும்போது சீருடை தரித்தவர்கள் அதனை குழப்பமுனைவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி சிவில் அதிகாரிகள் தங்களது கடமையினை மேற்கொள்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தவேண்டும்.
இது தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தின் தாய்ச்சங்கம் ஆகியவற்றின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
21 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago