2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் விடுதி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Niroshini   / 2017 ஜனவரி 24 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள விடுதிப்  பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு காணப்படும் என்று, உயர்க் கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னதாக கேள்வியெழுப்பிய நளிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விப் பயிலும் 1,800 மாணவர்கள், விடுதி வசதிகள் இன்றி அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு விடுதி வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுமா? என்று வினவினார்.

அதற்குப் பதிலளித்த உயர்க் கல்வியமைச்சர், “பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், நாட்டில் இல்லை. பதில் ஆணையாளரே கடமையில் இருக்கின்றார். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு, வாடகைக்கே விடுதி பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X