2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு  மாகாணசபை பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் பன்;முகப்படுத்தப்பட்ட 23 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 05 பள்ளிவாசல்கள், 13 பொது அமைப்புகள், விளையாட்டுக்கழகங்களுக்கு கணினி, ஒலிபெருக்கிச் சாதனங்கள், கதிரைகள்  வழங்கும் நடவடிக்கை பிரதேச செயல கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (12) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது மாகாணத்தை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கு போதியளவான வளங்கள் உள்ளன. எனவே, எமது மாகாணத்திலுள்ள அனைவரினதும் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகளெனப் பலரும் முன்வரவேண்டும்' என்றார்.
'மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகாரிகளில் சிலர் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றவர்களாக உள்ளனர்.;' எனவும் அவர் தெரிவித்தார்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X