Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி, எதுவும் தெரியாது என எவரும் கூறமுடியாது எனவும் குறிப்பாக இந்த விடயத்தில் பெண்கள் ஒரு படி முன்னேறி, சட்டப் பாதுகாப்பு அறிவுப் புலமையைப் பெற்றிருக்க வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.
இதனால் மட்டக்களப்பிலுள்ள இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு அறிவூட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில், பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சட்டப்பாதுகாப்பு பற்றிய பயிற்சி நெறிகள் குறித்து, இன்று (26) அவர் கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவிகள் உட்பட உயர்கல்வியை அடைந்து கொண்ட யுவதிகள், இந்த இலவசமாக சட்டப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்றார்.
இலங்கை சட்டங்களின் தரம், அனைத்துலக சட்டங்களின் தராதரங்கள், நீதிப் பொறிமுறை, தகவல் அறியும் உரிமை, திருமணம், விவாகரத்து, தாபரிப்பு உட்பட அனைத்து வகையான சட்டப் பாதுகாப்பு அறிவுகளும் இதில் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன எனவும் அவர் விவரித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை முழுவதுமாக உள்ளடக்கியதாக இந்த சட்டப் பாதுகாப்புப் பயிற்சி நெறிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 74 பெண்கள் தமது பயிற்சிகளை முடித்துக் கொண்டு சான்றிதழ்களைப் பெற்றதும் எதிர்கால வளவாளர்களாக அவர்கள் செயற்படவுள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago
57 minute ago