2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சட்டத்தரணி வீட்டில் கொள்ளை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
 
மட்டக்களப்பில் பிரபல சட்டத்தரணி ஒருவரின் வீட்டின் ஜன்னல் வழியாக உள் நுழைந்து அலுமாரியிலிருந்த சுமார் பத்து பவுன் தங்க நகைகள் மற்றும் 10,000 ரூபாய் பணம் ஆகியன இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இளைஞனொருவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலுதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .