Princiya Dixci / 2016 ஜூன் 18 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சட்டவிரோத மதுபானம் விற்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனையில் குடும்பப் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட போதைப் பொருள் ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக சம்பந்தப்பட்ட பெண் சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (17) சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது இலுப்படிச்சேனை - பாலர்சேனை எனுமிடத்திலுள்ள வீடொன்றில் வைத்து 750 மில்லிலீற்றர் கொண்ட இரு சாராய போத்தல்களுடன் 55 வயதான இப்பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட போதைப் பொருள் ஒழிப்புப் பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ. அப்துல் வஹாப் தலைமைலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago