Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சந்தேகத்துக்கிடமான வகையில் எவராவது நடமாடினால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அல்லது அல்லது சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு பொதுமக்கள் அறிவிக்க வேண்டுமென மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.ரட்நாயக்கா தெரிவித்தார்.
பொதுமக்களுக்கான நடமாடும் சேவை, புதிய காத்தான்குடி கிழக்கு 167 பி கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடிப் பிரசேத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்;று வருகின்றன. இந்தக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் இடமாக பொலிஸ் திணைக்களம் உள்ளது. பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தங்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்த சிவில் பாதுகாப்புக் குழுக்கள் உறவுப்பாலமாக அமைய வேண்டுமெனவும் அவர் கூறினார்.

4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago