Editorial / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு பிரதான சமுர்த்தி காரியாலயத்துக்குரிய, 57 இலட்சம் ரூபாயை களவாடிய சம்பவம் தொடர்பில், சமுர்த்தி உத்தியோகஸ்தர் உள்ளிட்ட ஒன்பது பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களால், களவாடப்பட்டு, மறைது வைக்கப்பட்டதாகக் கூறப்படும், 27 இலட்சம் ரூபாய், அதிகாரியின் வீட்டு வளாகத்திலுள்ள தென்னை மரமொன்றின் உச்சியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சமுர்த்தி காரியாலயத்துக்கு உரித்தான 57 இலட்சம் ரூபாயை, கணக்குப் பகுதிக்குப் பொறுப்பாகக் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர், காரியாலய கணக்காளரின் கையொப்பத்தை காசோலையில் இட்டு, நேற்று முன்தினம் மாற்றியுள்ளார்.
இந்நிலையில், கொழும்பில் உள்ள சமுர்த்தி திணைக்களத்திலிருந்து செவ்வாய்க்கிழமை குறித்த அலுவலத்தின் (திணைக்களத்தின் சராசரி நிலுவையை) மீதியை பரிசோதித்து, கொழும்புக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது சமுர்த்தி திணைக்களத்தின் கணக்குக்கான வங்கிப் பணம் பரிசோதிக்கப்பட்டது. அதில், 57 இலட்சம் ரூபாய் காணாமற் போயுள்ளது.
இவ்விடயமாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸில், கணக்காளரால் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனை விரிவாக ஆராய்ந்த பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி, சமுர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவரைக் கைது செய்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மேலும் எட்டுப் பேரை, பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
பிரதான சந்தேகநபரான அந்த அதிகாரியின், சொந்தவூரான வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவட்டி கிராமத்துக்குச் சென்று சோதனைகளை மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே, தென்னை மரத்திலிருந்து 27 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
11 minute ago
17 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
30 minute ago
37 minute ago