2025 மே 02, வெள்ளிக்கிழமை

சமூக இடைவெளியை பேணாதோருக்கு எச்சரிக்கை

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

சமூக இடைவெளிகளைப் பேணாமலும் முகக் கவசங்கள் அணியாமலும் வர்த்தக நிலையங்களில் பொருள் கொள்வனவுகளில் ஈடுபட்ட நபர்களுக்கும், வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இன்று (03) எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நாளை (04), நாளை மறுதினம் (05) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், கோறளைப்பற்று, ஓட்டமாவடி பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் பொருள்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் முண்டியடித்தனர்.

இவ்வாறு பொருள்களை கொள்வனவு செய்யச் சென்ற நபர்கள் சமூக இடைவெளிகளைப் பேணாமல் செயற்பட்டதால், குறித்த பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X