Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 மார்ச் 25 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான்
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு - கல்குடா மதுபான உற்பத்தித் தொழிற்சாலையின் நிர்மாண வேலைகளை நிறுத்தும் வகையில், நீதிமன்றத் தடை உத்தரவைப் பெறுமாறு, வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இதற்கு முன்னர் மாகாண சபை ஏகமனதாக ஒரு தீர்மானத்தையெடுத்து, அதனை வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும், அவர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில், வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையை நிறுத்துவதற்காக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இதனடிப்படையிலேயே, போதைப்பொருளுக்கு எதிரான மாபெரும் பேரணியொன்றையும் நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஏறாவூரில் நடத்தியிருந்தோம்.
எமது மாகாணத்தில் யுத்தத்துக்குப் பின்னரான காலப் பகுதியில் போதைப் பொருளின் பாவனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்பதுடன், கிழக்கில் மேலும் போதைப்பொருள் பாவனையை அதிகரிக்கின்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்க மடியாது என்பதை மிகத் தெளிவாகக் கூறிக் கொள்கின்றேன்.
கிழக்கிலிருந்தும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் போதைப் பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் கிழக்கு மாகாண சபை உறுதியாக இருக்கின்றது.
அத்துடன், இந்த மதுபான தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்குமுள்ளான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
19 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
51 minute ago