2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிறந்த விளைச்சலில் சோளம் செய்கை

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 நவம்பர் 26 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 3,750 ஏக்கரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக, மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாவட்டத்தின நெற்செய்கைக்கு அடுத்த படியாக செய்கை பண்ணப்படும் உப உணவுப் பயிர்ச்செய்கையான சோளம் செய்கை, இம்முறை நல்ல விளைச்சலைத் தந்திருப்பதாக சோளம் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, கிரான், செங்கலடி, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் சோளம் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

மாவட்டத்தின் அதிகமான இடங்களில் சோளக்கதிர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 100 ரூபாய்க்கு 10 சோளம் கதிர்கள் விறபனையாவதை அவதானிக்க முடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X