Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜனவரி 14 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (13) மாலை 12 வயதுச் சிறுமியொருவரின் சடலம் மீட்டகப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறு பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
உடற் கூறு பரிசோதனைக்காக சடலம், மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சிறுமியின் தாய், கணவன் பிரிந்து சென்ற நிலையில், இன்னொருவரைத் திருமணம் செய்துள்ளதாகவும் சிறுமி தனது தாய் மற்றும் சிறிய தந்தையுடனேயே வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி கடைசியாக 'நீங்கள் சந்தோசமாக வாழுங்கள்' என்ற வசனத்தை எழுதி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, பல கோணங்களில் விசாரணைகளைப் பொலிஸார் துரிதப்படுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .