Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுனாமி அனர்த்தத்தில் காணாமற்போய், பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, 09 தாய்மார்களால் உரிமை கோரப்பட்ட “சுனாமி பேபி 81” என்ற கல்முனையைச் சேர்ந்த ஜெயரராஸ் அபிலாஸ், தனது களுதாவளை இல்லத்தில் நிர்மாணத்துள்ள நினைவுத்தூபியில், இன்று (26) மலரஞசலி செலுத்தினார்.
67 நாட்களேயான அபிலாஸ், கடலலைகளால் அள்ளுண்டு செல்லப்பட்டு, அரை நாள்களின் பின்னர் பாறையொன்றினுள் புகுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தாதியர்களின் பராமரிப்பில் வைக்கப்படடிருந்த அபிலாஸை, 09 தாய்மார்கள் தமது பிள்ளையென உரிமை கோரியபோது, நீதிமன்றம் சென்று, டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் தந்தையான ஜெயராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது 10ஆம் ஆண்டில் கல்வி பயிலும் உலகப்புகழ் பெற்ற அபிலாஸ் ஒரு வைத்தியராகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago