2025 மே 08, வியாழக்கிழமை

சான்றிதழ் பெறுவதில் சிரமம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பிலுள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் மோட்டார் சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக வைத்தியச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கு வருகை தருவோர் சிரமத்தை எதிர்நோக்குவதாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் பணிப்பாளரிடம் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் வைத்தியச்சான்றிதழ் பெறுவது அவசியமாகவுள்ளது.  இதனைப் பெறுவதற்காக அதிகாலை 04 மணிக்கு மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள இந்நிறுவகத்துக்கு வந்து வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இருப்பினும், உத்தியோகஸ்தர்கள் காலை 8 மணிக்கே வந்து சிட்டை வழங்குகின்றனர். அதுவும் ஒரு நாளில் 100 பேருக்கே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இந்த 100 சிட்டைகளுக்குள் அன்றையதினம் தாம் வராவிட்டால், மறுநாள் வந்து வரிசையில் காத்திருக்கவேண்டியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். இந்நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க அதிபர், மட்டக்களப்பு நிறுவகத்தின் அதிகாரி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் உள்ளிட்டோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X