2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடைசெய்ய வேண்டும்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது முற்றாகத்  தடைசெய்யப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி அன்வர் பாடசாலை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுச் செயலமர்வின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் உரையாற்றுகையில், 'சிறுவர்கள் கல்வி கற்கும் வயதில் அவர்களை வேலைக்கு அமர்த்த முடியாது.
காத்;தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுவினர், காத்தான்குடிக் கடற்கரையில் கச்சான், பருப்பு உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் சிறுவர்கள் மற்றும் பொதுவிடங்களில் வேலை செய்யும் சிறுவர்களிடம் அவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிவதுடன், அவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.  
அடுத்த கட்ட நடவடிக்கையாக அச்சிறுவர்களின் பெற்றோர்களுக்கும்  விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், சிறுவர்களை தண்டிக்க முடியாது. அவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது. அவர்களுக்கு அன்பாக விடயங்களைப் புகட்ட வேண்டும். சிறுவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான வசதிகள், சுதந்திரமாக விளையாடுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X