Suganthini Ratnam / 2017 மே 03 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125ஆவது ஜனன தினத்தையிட்டு கல்லடியில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
சுவாமி விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு விழாச் சபையினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா மகராஜினால் சமாதிக்கு தீபம் காட்டி மலர் அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்லடி விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலய மாணவிகளால் 'வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ' எனத் தொடங்கும் பாடல் பாடப்பட்டதோடு 125 ஆவது ஆண்டு நினைவான சமாதி அமைந்துள்ள வளாகத்தில் பூமரங்கள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago