2025 மே 19, திங்கட்கிழமை

ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வு

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.விஜயரெத்தினம், வடிவேல் சக்திவேல், பேரின்பராஜா சபேஷ்

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் நாளை (25) மாலை 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வின் அறிமுகவுரையை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான கி.துரைராசசிங்கம் ஆற்றவுள்ளார்.

நினைவுப் பேருரையை, “இலங்கைத் தமிழர் அரசியலில் நழுவிய வாய்ப்புக்களும், நடப்பியல் அரசியலும்” எனும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நிகழ்த்தவுள்ளார்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு புனித நத்தார் தினத்தன்று, மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையின் போது, துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X