Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
டைனமோ (மின்பிறப்பாக்கி) இல்லாமல் காணப்பட்ட 51 சைக்கிள்களை கடந்த மூன்று தினங்களில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள்களுக்கு டைனமோவை கொண்டுவந்து உரிமையாளர்கள் பொருத்தும் பட்சத்தில், சைக்கிள்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.
14 தினங்களினுள் இந்த சைக்கிள்களுக்கு டைனமோவை உரிமையாளர்கள் கொண்டுவந்து பொருத்த வேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுமெனவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .