Mithuna / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் உணவு கையாள்பவர்களுக்கான நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சுகுணனின் ஆலோசனைக்கும் அறிவுறுத்தலுக்கமைய, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். நசிர்தீனின் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பசீர், பொதுச் சுகாதார பரிசோதகர் றஹ்மத்துல்லாஹ் ஆகியோரால் புதிய காத்தான்குடி பத்ரியா ஜூம்மா பள்ளி வாயல் மண்டபத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது காத்தான்குடியிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் உணவு கையாள்பவர்கள் 150 பேருக்கும் நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .