Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜனவரி 07 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தி, அச்சுறுத்தல் விடுத்த தந்தையையும் மகனையும், நாளை செவ்வாய்க்கிழமை (09) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான், உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வியாழக்க்கிழமையன்று (04) புதிய காத்தான்குடி பதுறியா வீதியிலுள்ள மரைக்கார் லேனில், சுகாதார அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று டெங்குப் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு வீட்டைச் சோதனை செய்ய முற்பட்ட நேரத்தில், அந்த வீட்டு உரிமையாளரும் அவரது மகனும், பொதுச் சுகாதாரப் பரிசோதகரைத் தாக்கியுள்ளதுடன், டெங்கு சோதனை செய்யவதற்குத் தடையாக இருந்து, அச்சுறுத்தலையும் விடுத்திருந்தனர்.
இது தொடர்பில், காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தது, அவ்விருவரும் கைது செய்யப்பட்டதோடு தாக்குதலுக்கு உள்ளான பொதுச் சுகாதார பரிசோதகர், காததான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .