Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
வா.கிருஸ்ணா / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தலைமைத்துவப் பதவிக்கு ஆசைப்பட்டு, ஒரு தனிக்கட்சியை உருவாக்கி, தெற்கிலுள்ள பேரினவாதிகள் விரும்புவது போன்று வாக்குகளைச் சிதறடிக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டு. ஊடக மய்யத்தில் நேற்று (10) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “மாற்றுத் தலைமை என்கின்ற விடயத்தை மையப்படுத்தி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்யை, வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்ணேஸ்வரன் உருவாக்கியுள்ளதாக அறிந்துள்ளோம்.
“பொதுவாகவே விக்ணேஸ்வரன் முன்னுக்குப் பின் முறனான கருத்துகளையே கூறிவருகின்றார். அவரது முதுமை, அரசியல் சார்ந்த முதுமை அல்ல. நாடாளுமன்றத்தில் வென்று எம்மோடு இணைந்து செயற்பட விரும்புகின்றார் என்றால், கொள்கையளவில் ஒத்துச் செல்லக் கூடிய கட்சியுடன் தலைமைப் பதவியின்றி, அவரால் செயற்பட முடியாதா?
“தேர்தலுக்கான கூட்டணி இல்லை என்று கூறுகின்றார். ஆனால், தேர்தலின் போதுதான் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
“தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட வேண்டும், அவர்களுடைய கொள்கைகள் சின்னாபின்மாக்கப்பட வேண்டும், தமிழ் மக்கள் பலமான சக்தியாக இருக்கக் கூடாது, ஒரே குரலில் அவர்களின் கருத்துகள் இருக்கக் கூடாது, தமிழ் அரசியல் வாதிகள் தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என நினைத்து செயற்படுபவர்கள் தென்னிலங்கையில் உள்ள பேரினவாதிகள்.
“இவ்வாறான பேரினவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற செயற்பாடகவே இது அமைந்துள்ளது. எனவே, சி.வி.விக்ணேஸ்வரனுடைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும், மாகாண சபையில் செயற்பட்ட விதம் தொடர்பிலும் மக்கள் மிக அவதானமாக இருப்பார்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
13 minute ago