Administrator / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பழையவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியினரே பிரசாரம் செய்தனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பழையவர், புதியவர் என்பதை மட்டக்களப்புக்கு மாத்திரம் ஏன் பயன்படுத்தினார்கள் என நான் கேட்க விரும்புகின்றேன்.
திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை ஆகிய இடங்களுக்கு பழையவர் புதியவர் என்ற கதையில்லாமல், மட்டக்களப்பில் மாத்திரம் பழையவர், புதியவர் என்ற கதை பிரசாரம் செய்யப்பட்டது.
என்னோடு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பொன்.செல்வரசா மற்றும் பி.அரியநேத்திரன் ஆகியோர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்படாமல் போனமையையிட்டு நான் கவலையடைகின்றேன்.
சித்தாண்டி மக்களுக்கு நான் எதிரியாக்கப்பட்டுள்ளேன். சித்தாண்டி பகுதி பிரச்சினைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது தொடர்பாக நான் துண்டுப்பிரசுரமொன்றை அந்தப்பகுதி மக்களுக்கு விநியோகித்துள்ளேன்.
நாங்கள் எப்போதும் சித்தாண்டிக்கு ஒரு வேட்பாளர் வருவதை விரும்பியவர்கள்.
சித்தாண்டி மக்களுக்கு வேட்பாளர் ஒருவரை நியமிப்போம் எனக் கூறிவிட்டு பின்னர் அவர்களை ஏமாற்றியதெல்லாமே தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரேயாகும் என்றார்.
56 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago