2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தரிசு நிலங்களில் நவீன தொழில்நுட்பங்கள்

வடிவேல் சக்திவேல்   / 2017 நவம்பர் 08 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தரிசு நிலத்தில் நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்தி, உப உணவுப் பயிர் செய்கைக்கான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு, இன்று (08) நடைபெற்றது.

மட்டக்களப்பு, போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் வம்மியடியூற்றுக் கிராமத்தில் சேனைக்காடு எனும் பகுதியில் சுமார் 30 வருடங்களாக செய்கை பண்ணப்படாமலிருந்த மேட்டுநிலக் காணியில், மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தின் முயற்சியின் பலனாக 27 விவசாயிகளுக்குச் சொந்தமான 50 ஏக்கர் காணியில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி பயிர் விதைகள் நடப்பட்டன.

இதன்போது, ஒரே இடத்தில் ஒரே பார்வையின் கீழ், 50 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை, பயறு, சோளம் உள்ளிட்ட உப உணவு விதைகள் நடப்பட்டதுடன், இவற்றுக்குத் தேவையான உள்ளீடுகளும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டமை குகறிப்பிடத்தக்கதாகும்.

பாலையடிவட்டை விவசாயப் போதனாசிரியர் எஸ்.சசிகுமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு பிரதி விவசாயப் பணிப்பாளர் நாயகம் எம்.பரமேஸ்வரன், மட்டக்களப்பு தெற்கு உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞானம், விவசாயப் போதனாசிரியர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர், கிராமமட்ட பொது அமைப்புகள் விவசாயிகள், உப உணவு உற்பத்தியாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X