2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘தாரை வார்ப்புக்கு அனுமதியில்லை’

வடிவேல் சக்திவேல்   / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எமது வளங்களைப் பிறருக்குத் தாரை வார்த்துக் கொடுக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது பிரதேசத்தில் தேங்கிக் கிடக்கின்ற வளங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, அவற்றினூடாக எமது மக்கள் அதி உச்ச நன்மையடையக் கூடிய அளவுக்கு மாற்ற வேண்டும்” என, உள்ளூராடசிமன்றத் தேர்தலில் களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மேகசுந்தரம் வினோராஜ் (வினோ) தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் இன்று (25) காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“உள்ளூராடசிமன்றம் என்பது உள்ளூர் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு செயற்படுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். இதனை இயக்குவதற்கு தேசிய அரசியல் கட்சிகளில் இருந்து இங்கு வந்து யாரும் செயற்பட வேண்டிய அவசியமில்லை. அதற்காகத்தான் எமது மக்களால் மிக நீண்ட காலமாகவிருந்து கட்டியெழுப்பப்பட்டு இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சி உள்ளது. எனவே நமது பிரதேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை மாத்திரம் எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மக்கள் முன்வைத்து தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகக் காணப்படுபவர்கள் எமது மக்களைத் திசைதிருப்பப் பார்க்கின்றார்கள். எமது மக்கள் அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு கட்டுப்படமாட்டார்கள்.  உள்ளூராட்சி மன்றத்தினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் அதனை மேற்கொள்ளலாம். அதற்கு பேரினவாதக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டியதில்லை.

“காலாகாலமாக எமது மக்களின் அடிமட்டப் பிரச்சினைகள் தொடக்கம் அரசியல் பிரச்சினைகள் வரைக்கும் உடனுக்குடன் கரிசனை செலுத்திக் கொண்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே.

எனவே இதுவரைகாலமும் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்ததுபோல் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் அனைவரும் ஒன்றிணைந்து வீட்டுச் சின்னத்துக்கு மாத்திரம் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X