Editorial / 2022 மே 27 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
படகில் தொழிலுக்குச் செல்ல வேண்டிய மீனவர்கள், சாதாரண தோணியில் மீன்படிக்கச் சென்றமையால் தோணி கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னுமொருவர் உயிர்த் தப்பியுள்ளார்.
இன்(27) காலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை கடலில் மீன்பிடிப்பதற்கான மீன்பிடி படகிற்கு மண்ணெண்ணெய் இன்மையால் சாதாரண தோணியில் மீன்பிடிக்கச் சென்றபோது சுழல் காற்று காரணமாக தோணி நடுக்கடலில் மூழ்கிய நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிலித்தனர்.
மரணமான குறித்த மீனவர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் பாலமுனையில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் 52 வயதானவர் ஆவார். அவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். எனத் தெரிவித்த
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
9 minute ago
27 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago
45 minute ago
2 hours ago