Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி பிரசேத்தில் நேற்றிரவு(05) வீடொன்றுக்குள் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதி பிரசேத்தின் அமரசிங்கம் வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் காயமடைந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கே.சந்திரகுமார்(வயது 56), எஸ்.பரமேஸ்வரி(வயது 46), எஸ்.புவி (வயது 20) ஆகியோரே இவ்வாறு தாக்குதலுக்கிலக்காகியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்குள்ளானவர்கள் மீது ஏற்கெனவே சிலரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்தனர்.
ஆரையம்பதி பிரசேத்திலுள்ள அரசியல்வாதியொருவரின் சகாக்களே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்களே தொடர்ந்து தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் தாக்குதலுக்ககுள்ளானவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
40 minute ago
3 hours ago